இரண்டாவது மனைவிக்குபிறந்த.குழந்தை
இரண்டாவது மனைவிக்குபிறந்த.குழந்தை
வந்தானே மூன்றுக்கு உடையானோடு
வன்மையுள்ள ரவி கூடித் திரிகோணத்தில்
அந்தமுடன் இருக்கவே மூன்றைச் சனி
அன்புள்ள குருவுமே பார்த்தாராகில்
விந்தையுட னிவன்ஜனனம் கருவி கொண்டு
விளக்கமுடன் வந்திட்ட பிள்ளை ஆகும்
எந்தையே தகப்பனுக்குத் தாரம் ரெண்டில்
இன்பமுடன் இளையவள்தான் பெற்ற புத்திரன் . சுகர் நாடி 303
(இ-ள்) மூன்றுக்குடைவனோடு சூரியன் கூடி திரிகோணத்தில் சனியுடன் இருக்க அந்த மூன்றாம் இடத்தை குருவும் சனியும் பார்த்தால் விந்தையான பிறவியாகும் . இவர்களின் தாயர் இரண்டாம் மனைவியாக வாழ்கைப்பட்டு பிறந்த குழந்தையாவர்.
ஜாதகனின் தந்தையை குறிப்பிடும் இடம் 9 - ஆம் இடமாகும் என்பது அனைவம் அறிவோம் தந்நையின் கூட்டாளி மூன்றாம் வீடு முலமாக அறிய முடியும்.
காலபுருசனுக்கு ஒன்பதாம் அதிபதி குரு / தந்தைக்கு காரகன் சூரியன் / கர்மக்காரகன் சனி
இவர்களின் தொடர்பு பெற்றிருந்தால் இரண்டாவது மனைவிக்கு பிறந்தவர்கள்.
அனுபவத்தில் மிகச்சிறப்பாகவே உள்ளது. பிரபலமனவர்களின் ஜாதகத்தில் இந்த அமைப்புள்ளது.
பல ஜோதிட நூல் பதிப்பாளர் அவர்களின் ஜாதகத்தில் உள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்களின் ஜாதகத்தில் மூன்றில் செவ்வாய் 9 ல் சூரியன் நின்று மூன்றாமிடத்தை பார்க்கிறது . குரு 9 ஆம் பார்வையால் மூன்றாமிடத்தைப் பார்க்கிறது . வக்கிர சனியை குரு பார்க்கிறார் .
பல்வேறு ஜாதகங்களை ஆய்வு செய்யும் போது 3. 9 ஆம் இடங்களை சூரியன் , குரு , சனி மற்றும் இவர்கள் நின்ற வீட்டுக்குடையவர்கள் தொடர்பு கொள்ளும்போது இனைய தாரத்து பிள்ளைகள் என்பதை அறிய முடிகிறது .
சூரியஜெயவேல் 9600607603
Comments
Post a Comment