இன்று ஒரு ஜோதிட சூத்திரம்
இன்று ஒரு ஜோதிட சூத்திரம்
சொல்லுமையா ராசிதனக் கைந்து பத்தில்
சோர்வன சேய்நிற்கில் மாமற்காகா
புல்லுருவாய் சனி நிற்கில் பிள்ளைக்காகா
சொல்லாத ரவி நிற்கில் பிதாவுக்கு துஞ்சம்
பொல்லாத சசி நிற்கில் மாதாவுக்காகா
சோர்ந்து நின்ற ரவி சோம ஏழுக்கப்பால்
சொல்லுகிறேன் சனி செவ்வாய்
நிற்பாராகில்
சோகமுள்ள தந்தை தாய்மரணமாமே
இராம தோவர் காவியம்❗
1) ஜாதகத்தில் லக்கினத்திற்கு 5 - 10 - ல் செவ்வாய் இருந்தால் மாமானுக்கு ஆகாது.
2) 5 - 10 - ல் சனி இருந்தால் குழந்தைக்கு ஆகாது
3) 5 - 10 - ல் சூரியன் இருந்தால் தந்தைக்கு கஆகாது.
4) 5 - 10 - ல்சந்திரன் இருந்தால் தாயருக்கு ஆகாது.
5,) சூரியனும்,சந்திரனும் இணைந்திருந்து இவர் களுக்கு 7 - ல் செவ்வாய்,சனி இணைந்திருந்தால் தந்தையும், தாயும் மரணமடைவார்கள்
மாமன் சிறுவன் தாய்தந்தை மரணம் ஐந்துமீரைந்தும்
பூமன் காரி மதிவெய்யோன் நிற்கி சுபரும் நோக்கி
சோமற் சேய் சனி நிற்கிற்றாய்
சாஞ்சுடர்க் கேழ் பிதாமாணம் தீமைக் கோட்க
ளுடலுயிரைப்பற்றி நிற்கிற் சிறுவன்சாவம் . (வீமகாவி)
(இ - ள்) ஜாதகனின் லக்கிறத்திற்கு ஐந்தாமிடம் பத்தாமிடத்தில் செவ்வாய் இருந்தால் மாமனுக்கும் , சனி இருந்தால் பிள்ளைக்கும் , சந்திரன் இருந்தால் மாதாவுக்கும் , சூரியன் இருந்தால் பிதாவுக்கும் மரணம் உண்டாகும் சுபக் கிரகம் பார்வையில்லாத சந்திரனுக்கு ஏழாம் வீட்டில் செவ்வாயாவது சனியாவது இருந்தால் மாதா மரணம் , சூரியனுக்கு எழிற் சனி , செவ்வாய் இருந்தால் பிதா மரணம். பாவக் கிரகங்கள் ( உடலையும் , உயிரையும் ) பற்றி நிற்கில் பிள்ளை மரணம் என்று சோதிட அறிந்த பெரியோர்கள் திடமாய்ச் சொல்லு வார்கள் . ( உடல் - சந்திரன் நின்ற லக்கினம் . உயிர் - ஜெனித்த லக்கினம் .)
சூரியஜெயவேல்9600607603
Comments
Post a Comment