செவ்வாய் தோஷம் சிறப்பாய்வு
🚫 செவ்வாய் தோஷம் சிறப்பாய்வு
🚫 ஒருவர் பிறக்கும்போது லக்னத்திலிருந்து 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் ஏதேனும் ஒரு வீடுகளில் செவ்வாய் கிரகம் அமர்ந்திருந்தால் செவ்வாய் தோஷம் ஆகும். ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் என்றதுமே ஒருவித பதற்றத்துக்கும் அவநம்பிக்கைக்கும் ஆளாகிவிடுகிறோம். காரணம், திருமணத் தடைக்குக் மற்றும் பல சச்சரவுகளுக்கு காரணமாகிவிடுகிறது தோஷம் இல்லை என்ற நிலைக்கு பல்வேறு உபகரணங்கள் விதிகள் உண்டு அவைகளை ஆராய்ந்த பிறகு தான் முடிவு செய்ய வேண்டும்.
🚫 செவ்வாய் என்பது ஆற்றல், செயல், ஆக்கிரமிப்பு மற்றும் பேரார்வம் ஆகியவற்றுடன் தொடர்புடைய ஒரு கிரகம்.
🚫 ஜோதிடத்தில், செவ்வாய் தோஷம் என்பது ஒரு நபரின் வாழ்க்கையில் சவால்கள் அல்லது தடைகளை ஏற்படுத்தக்கூடிய பிறப்பு அட்டவணையில் செவ்வாயின் சில நிலைகளைக் குறிக்கிறது.
🚫 செவ்வாய் தோஷத்தால் கோபம், சச்சரவு, விபத்து, உடல்நலம் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.
🚫 இருப்பினும், செவ்வாய் தோஷத்தின் எதிர்மறை விளைவுகளை குறைக்கும் சில விதிகள் : -
🚫 செவ்வாய் ஆட்சி வீட்டில் இருந்தால்
🚫 வியாழனுடன் செவ்வாய் சேர்க்கை
🚫 வியாழன் வீடுகளின் செவ்வாய்
🚫 செவ்வாய் பலம் பெற்று வியாழனின் பார்வை பெற்றிருந்தால்
🚫 செவ்வாய் நின்ற நட்சத்திர அதிபதி நல்ல நிலையில் மற்றும் வியாழனுடன் சேர்ந்திருந்தால்
🚫 செவ்வாய் கிரகத்தின் பல்வேறு இணைப்புகள் பற்றிய கூடுதல் தகவல்கள்.
🚫 செவ்வாய் ராகுவுடன் இணைந்தால், குஜ ஸ்தம்பனம் எனப்படும் நிலையை உருவாக்கலாம், ராகு செவ்வாயின் ஆற்றலைத் குறைக்கிறது. உந்துதல் மற்றும் ஊக்கமின்மைக்கு வழிவகுக்கும், அத்துடன் நடவடிக்கை எடுப்பதிலும் முடிவுகளை எடுப்பதிலும் சிரமங்களை ஏற்படுத்தும்.
🚫 செவ்வாய் கேதுவுடன் இணைந்து பிசாச யோகத்தை உருவாக்கலாம், அதீத கோபத்தையும் மனக்கிளர்ச்சியையும் ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது, குறிப்பாக பெண்களுக்கு அதிகமாக பாதிக்கும்.
🚫 செவ்வாய் சூரியனுடன் இணைந்தால் உடலில் வெப்பத்தை உருவாக்கி, இரத்த அழுத்தம் மற்றும் உறவுகளில் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.
🚫 செவ்வாய் சனியுடன் இணைந்திருந்தால் முடிவெடுப்பதில் சவால்களை உருவாக்கலாம் மற்றும் செவ்வாய் மற்றும் சனி இருக்கும் ராசி (வீடு) தொடர்பான தனிப்பட்ட வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தும்.
💢 குறிப்பு ;— ஒரு ஆணுடைய ஜாதித்தில் செவ்வாய் தோஷம் அமைந்திருந்தால் அந்த ஜாதகர் தாயாரை போன்று குணநலன்கள் பழக்கவழக்கங்கள் உள்ளவர்.
💢ஒரு பெண்ணுடைய ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் அமைந்திருக்குமானால் ஜாதகி தந்தையாரின் குணநலன்கள் பழக்கவழக்கங்கள் உள்ளவர்.
💢இந்தத் தன்மைகளை வைத்து ஒருவருக்கு செவ்வாய் தோஷம் இருக்கிறதா ❓ இல்லையா❓ எந்த அளவுக்கு இருக்கிறது என்று முடிவு செய்ய முடியும் ❗
சூரியஜெயவேல் 9600607603
Comments
Post a Comment