ஜோதிட வர்க்க விளக்கம்

ஜோதிட வர்க்க விளக்கம் வான் வெளி என்பது நமது பூமியைச் சுற்றியுள்ள ஒரு மாபெரும் வட்டம் ஆகும் . 360 பாகைகள் கொண்ட அந்த வட்டத்தை 12 பிரிவாக பிரித்து ஒரு 30 பாகைகள் கொண்ட ராசிகளாக வகுத்துள்ளது ஜோதிட சாஸ்திரம் . நமது பாரமபரிய ஜோதிடத்தில் கிரகங்களின் பலத்தைக் கணிக்க பலவகையான கணிதங்கள் உள்ளது இவ்வளவு பலம்களையும் கணித்துப் பலன் சொல்ல வேண்டுமென்று சொல்கிறது நமது ஜோதிட சாஸ்த்திரம் . அதேபோல் ராசி , நவாம்ச சக்கிரத்தைத் தவிர பின்வரும் சக்கிரங்களையும் கணிக்க வேண்டும் . " ஷட்பலம் " என்ற முறையைக் கையாளுகின்றனர் . துல்லியமான கணிதத்தைக் கொண்டது. என்னவென்று தெரிந்து கொள்வோம் . ஷட்பலமானது கீழே கொடுக்கப்பட்டுள்ளது 1. ஸ்தான பலம் 2. கால பலம் 3. அயன பலம் 4. நைசிர்கிக பலம் 5. திக்குப் பலம் 6. சேஷ்டாபலம் . ஸ்தான பலம் என்பது பலவிதமான பலங்கள் உள்ளடங்கியது . அதேபோல் ஒவ்வொரு பலமும் ஒவ்வொரு விதமான பலங்களை உள்ளடக்கியது ஆகும் . அவற்றைக் கீழே பார்ப்போம் . 1.ஸ்தான பலம் : A . உச்ச பலம் . B கேந்திராதி பலம் C. திரேஷ்காண பலம் . D . யுக்...