Posts

Showing posts from October, 2020

விபரீத ராஜயோக! 3

 விபரீத ராஜயோகம்    3    புதன் நின்ற ராசிக்கு ஆறு எட்டு பன்னிரண்டில் சனி இருந்தால் தவிர்க்க இயலாத காரணங்களால் இடம் மாற்றங்களை எதிர்கொள்ள நேரிடும் .    புதன் நின்ற ராசிக்கு ஆறு எட்டு பன்னிரண்டில் குரு இருந்தால் கட்டாயத்தின் பேரில் இடம் மாறி வெளியிடத்தில் வசிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.    லக்னத்திற்கு 6 8 12-ல் குரு இருந்தால் இடம் மாற்றங்களை எதிர்கொள்ள நேரிடும்.    சுக்கிரனுக்கு 6 8 12ல் குரு இருந்தால் இடம் மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டே இருக்கும். லக்னத்திற்கு 6 8 12ல் சனி  குருவிற்கு 6 8 12-ல் சனி  சுக்கிரனுக்கு 6 8 12-ல்  சனி இருந்தால் சொந்த ஊரில் முன்னேற முடியாது பல பாதிப்பும்,  கஷ்டங்கள் ஏற்படும். லக்கினம்  மேஷம் ரிஷபம் 6 8 12-ல்  குருவும் சனியும்  மிதுனம் மீனம் 6  12 செவ்வாயும் சனியும் கன்னி 6 12-ல்  சந்திரன் சுக்கிரன் சிம்மம் மகரம் 6 12-ல்  செவ்வாய் புதன்  துலாம் 6 12 சூரியன் புதன் விருச்சிகம் 6 12-ல்  சந்திரன் புதன் தனுசு 6 12-ல்  சூரியன் சுக்கிரன் இருந்தால் ஜ...

விபரீத ராஜயோகம் ! 2

 விபரீத ராஜயோகம்    2    சுக்கிரன் 12 ல் , புதன் 8 ல் , குரு 6 ல் இருந்தால் நன்மைகளையே செய்வர்கள் , 6,8,12 ல் இருக்கும் கிரகங்கள் நட்பு . ஆட்சி , உச்சமாக இருந்தாலும் , சுபக்கிரகங்களால் பார்க்கப்பட்டாலும் நற்பலன்களை தருவார்கள்.     6,8,12 ல் இருக்கும் கிரகங்கள் பகை , நீசம் அஸ்தமனம் பெற்றிருந்தாலோ அல்லது கிரக யுத்தத்தில் தோல்வி அடைந்திருந்தால் இந்த கிரகங்கள் அமுகூலமான நற்பலன்கள் தரும் .  " ரந்த்ரே போவ்யயஷஷ்ட கோரிபுவதௌ பந்த்ரேவ்யயே வாஸ்திதே  ரிப்பே லோபி ததைவ ரந்தரரிபுவே யஸ்யாஸ்தி தம்மின் வதேத்! அன்யோன்யர் கதாநிரீ சஷண யுதாஸ்சன்யையுத்தேசஷிதா ஜாதோ சௌந்ருபதி : ப்ரஸஸ்த விபவோ ராஜாதி ராஜேஸ்வர : !!      (இ-ள்) ஆ8 ம் அதிபதி 6 அல்லது 12 ல் இருந்தாலும் , 6 ஆம் அதிபதி 8 ல் அல்லது 12 ல் இருந்தாலும் 12  ஆம் அதிபதி 6 ல் அல்லது 8 ல் இருந்தாலும் விபரீத ராஜயோகம் ராஜாதி ராஜனாவார்கள் .    6,8,12 ஆம் அதிபதிகள் தங்களுக்குள் இணைவு பரஸ்பரப்பார்வை அல்லது பரிவர்த்தளை ஆகிய ஏதேனும் ஒருவகைச் சம்பந்தம் பெற்றிருந்து மற்ற கிரகங்களோடு மேற்படி ...

விபரீத ராஜயோகம்! 1

Image
 விபரீத ராஜயோகம்  !   1 இந்த யோகம் சற்று விரிவாக ஆய்வு செய்யப்பட வேண்டும் . இதில் பல் வேறு கருத்துக்கள் காணப் படுகின்றன .     6 ஆம் அதிபதி 8,12 ல் , 8 ஆம் அதிபதி 6,12 ல் , 12 ஆம் அதிபதி 6,8 ல் இருந்தாலும் இருந்தாலும் இவர்களுக்குள் பரிவர்த்தனை பெற்றாலும் 6,8,12 ம் அதிபதிகள் ஒன்றாய் இருந்தாலும்,இவர்களில் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டாலும் இவர்கள் பரஸ்பர கேந்திரத்திலிருந்தாலும் , திரிகோணங்களில் இருந்தாலும் - விபரீத ராஜயோகம் அமையும் . இந்த யோகம் - அமைந்தவர்கள் திடீர் யோகத்தை அனுபவிப்பார்கள் . எதிர்பாரத வகையில் கிடைக்கும் . எடுக்கும் காரியங்களில் வெற்றி கிட்டும் , புகழ் கிட்டும் ,     6 ம் அதிபதி 6 ல் ஆட்சியாக இருப்பது ஹர்ஷயோகம் , ஜாதகர்க்கு பலம் பொருந்திய உடல் அமைப்பு , அதிர்ஷ்டம் , சுகம் , பாக்கியம் , நல்ல பெயர் , புகழ் , எதிரிகளை வெல்பவர்கள் தீமைகளை செய்யாதவர்கள் . கிரமத் தலைவர் , புத்திரபாக்கியம் , தனயோகம் அமையும் .     8 ஆம் அதிபதி 8 ல் ஆட்சியானால் ஸரளயோகமாகும் . ஜாதகர்க்கு தீர்க்காயுள் , நல்ல படிப்பு , திடபுத்தி , புகழ் , தைரியம் ...

அமலாயோகம் !

Image
  16 வகை வெற்றிகளை வாரி வழங்கும் அமலாயோகம் !  ஜோதிடச்சுடர்  சூரியஜெயவேல்  சந்திரனுக்கு 10 - ல் சுபர்கள் அல்லது குரு இருந்தால் அமலா யோகம் ஏற்படும் .    வளர்பிறை சந்திரன், குரு மற்றும் சுக்கிரன் ஆகிய நன்மை தரும் சுபக்கிரகங்களுடன் தொடர்புடைய அமல யோகம் சிறப்பான யோகத்தை தரும்.     ஜாதகத்தில் சந்திரன் நின்ற வீட்டிற்கு (அதாவது ராசி) பத்தாவது இடத்தில் குரு அல்லது சுக்ரன் அமல யோகம் ஏற்படுகிறது.    லக்னத்துக்குப் பத்தாம் இடத்தில் சுபக் கிரகங்கள் இருந்தாலும் அமல யோகம் உண்டாகும். இந்த யோகத்தில் பிறந்தவர்கள் அழகிய முகத்தோற்றமும், நல்ல உடல் அமைப்பும் கொண்டவர்கள். சிறந்த அறிவாற்றல் மற்றும் இரக்க குணம் கொண்டவர்களாக இருப்பதுடன், பெற்ற தாயின் மீது அதிக பாசம் உள்ளவர் களாகவும் இருப்பார்கள்.    கலைகளின் மீது கொண்ட ஆர்வம் காரணமாக, ஒரு சில கலைகளை சுயமாகவே கற்று அதில் தேர்ச்சியும் அடைவார்கள். ஜோதிடம் மற்றும் அமானுஷ்யம் சம்பந்தமான விஷயங்களில் ஈடுபாடு கொண்டு, அவற்றில் ஆராய்ச்சிகளை மேற்கொள்வார்கள். தொழில் , வியாபாரத்தில் ஈடுபட்டால்  பெரும் லாபம...

நீச்சபங்க ராஜயோகம்

Image
 உலகப் புகழ் தரும்         நீச்சபங்க ராஜயோகம்  கிரகங்கள் நீசம் பெறுவது சிறப்பில்லை , கிரகங்கள் பலம் இழந்து இருப்பதே நீசம் எனப்படும் .    ஜாதகரின் ராசிச்சக்ரத்தில் ஏதாவதொரு கிரகம் நீசமாக இருக்க அந்தக் கிரகம் நின்ற ராசி நாதன் , லக்கின சந்திரனுக்கு கேந்திரத்திலோ ( அ ) தனது உச்ச ராசியிலோ இருந்தால் அந்த கிரகத்தின் நீசதன்மை நீங்கி ஜாதகருக்கு ராஜயோக பலன்களை தருவார்கள் ஜாதகத்தை ஆராய்ந்து பலனை கூற வேண்டும் . நீசம் என்பது பலம் இழந்து இருப்பது எனப் பொருளாகும் .  நீசக்கிரகம் பலம் இழந்த நிலையில் எப்படி ஒரு ஜாதகத்தை முன்னேற்ற முடியும்.  என்பதை காண்போம் .  துலா ராசியின் 10 வது பாகையில் சூரியன் நீசம் , விருச்சிக ராசியின் 3 வது பாகையில் சந்திரன் நீசம் ,  கடக ராசியின் 28 வது பாகையில் செவ்வாய் நீசம் ,  மீன ராசியின் 15 வது பாகையில் புதன் நீசம்  மகர ராசியின் 5 வது பாகையில் குரு நீசம் ,  கன்யா ராசியின் 27 வது பாகையில் சுக்கிரன் நீசம் ,  மேசம் ராசியின் 20 வது பாகையில் சனி நீசம் ,      மேல்கண்ட பாகையில் உரிய கிர...