Posts

Showing posts from July, 2021

ஜோதிடம் ஒரு தெய்வீக அறிவியல்

Image
  ஜோதிடம் ஒரு                 தெய்வீக அறிவியல்      ஜோதிடம் என்பது மனிதகுலத்திற்கு மிகவும் பழமையான சாஸ்திரங்களில் ஒன்றாகும். எல்லா அறிவியலிலும்  மிகவும் பழமையானது என்று நாம் கூறலாம். இது கணிதம், இயற்பியல், வேதியியல் போன்ற ஒரு பொருள் அல்ல, அங்கு வழக்கமான பொதுவான அறிவு மற்றும் வெறும் எளிய தர்க்கம் புரிந்துகொள்ளும் அடிப்படையாகும்.  ஜோதிடம் உயர்ந்த, மாயமான மற்றும் நுட்பமான சிந்தனை செயல்முறையை கோருகிறது. ஆழ்ந்த மறைக்கப்பட்ட சக்திகளையும் திறன்களையும் உருவாக்க தேவைப்படும் எளிய தர்க்கரீதியான விளக்கம் அல்ல  கருத்துகள் மற்றும் அடிப்படைகளுடன் ஒருவர் இந்த விஷயத்தைப் புரிந்துகொள்ள உள்ளுணர்வு திறன் தேவை ஆயுர்வேதம் உபவேதமாக இருக்கும்போது, ஜோதிடம் வேதங்களில் ஒன்றாகும். வேத ஜோதிடம் வேத அமானுஷ்யத்தில் அதன் ஆழமான வேர்களைக் கொண்டுள்ளது. பண்டைய முனிவர்கள் எதிர்கால அறிவைப் கையாண்ட ஜோதிட சாஸ்திரத்தை வேதங்களின் முக்கியமானவை என்று கருதினர். ஜோதிடம் என்பது கிரகங்களின் தாக்கங்களை உள்ளடக்கிய விஞ்ஞானம், நட்சத்திரங்கள் சுருக்கமாக விண்மீன...

கிரக ஆதிபத்யங்கள்

Image
  கிரக ஆதிபத்யங்கள்  :    ஸ்தானப் பிரிவுகள் :     லக்னத்திற்கு 1 , 5 , 9 , -ஆம் இடங்கள் - திரிகோண ஸ்தானங்கள்     1 , 4, 7 , 10 , -ஆம் இடங்கள் - கேந்திர ஸ்தானங்கள்        2 , 5 , 8 , 11 - ஆம் இடங்கள் - பணபர ஸ்தானங்கள்        3 , 6 , 9 , 12 , -ஆம் இடங்கள் - ஆபோக்லீம ஸ்தானங்கள் ஸ்தானங்கள்       3 , 6 , 10 , 11 , -ஆமிடங்கள் - உபஜெய ஸ்தானங்கள் .      3 , 6 , 8 , 12 , -ஆமிடங்கள் மறைவு ஸ்தானங்கள் கிரகபலம்        நட்பு , ஆட்சி , உச்சம் பெற்ற கிரகங்கள் நன்மை செய்வதிலும் சரி , தீமை செய்வதிலும் சரி பலமுடையவர்களாவார்கள் . பகை , நீச்சம் பெற்றவர்கள் பலங்குன்றியவர்களாவார்கள் .         நீச்சம்பெற்ற கிரகம் வக்ரம் பெறின் அதிக பலம் பெறும் ; உச்சம் பெற்ற கிரகம் வக்ரம் பெறின் பலமிழந்து விடும் .     5 , 9 - ஆம் அதிபதிகள் சுபராயினும் , பாபராயினும் விசேஷ நற்பலன்களையே அளிப்பார்கள் . அதிலும் ஐந்தாம் கோணாதிபதியைவிட , ஒன்பதாம் கோணாதிபதி ...

யோகமும் யோகபங்கமும்

Image
  யோகமும் யோகபங்கமும்     யோகம் என்பது வடசெல் இதற்கு சேர்க்கை என்று பொருள் இரண்டு (அ) அதற்கு மேற்பட்ட கிரகங்களின் இணைவிற்கு யோகம் என்று பெயர் ஜோதிடத்தில் யோகம் என்பது முக்கியமான அங்கமாகும் இந்த யோகம் எப்படிசெயல் படுகின்றது என காண்போம்.      காலத்தின் படியும் இடத்திற்கு ஏற்றது போல வயது பூர்வீக அடிப்படையில்தான் செயல்படுகிறது அதற்கு நம் முன்னோர்கள் நமக்கு பலவிதி முறைகளை அளித்துள்ளார்கள்.  லஷ்மீ ஸதாநந்த்ரி கோணம்ஸ்யாத்  விஷ்ணு தானஞ்ச கேநந்ரகம்யோ  ஸமபந்த பாத்ரேன ராஜ யோகாதி சம்பவேத்     ( இ-ள்) 1 - 5 - 9 ஆம் வீடுகள் லச்சுமிஸ்தானம் -  1 - 4 - 7 - 10 ஆம் விஷ்ணுஸ்தானம் எனப்படும். 1 - 5 - 9 / 4 - 7 - 10 - ஆம் ஒருவருக்கு ஒருவர் சேர்க்கை பெற்றிருந்தால் யோகத்தை தருவார்கள்.       சுப அசுப இரு பிரிவுகள் உள்ளது சுப யோகத்தில் யோக பலனும். அசுப யோகத்தில் தீய பலனும் நடைபெறும்.     சுப யோகங்கள் எப்போதும் யோகத்தை தருவார்கள். ஆட்சி,  உச்சம்,  நட்பு, மூலத்திரிகோணம்,  1 - 5 - 9 - சுபர்களின் தொடர்பு பெற்றிருக்க வேண...

பஞ்ச பூதத்தின் இயக்கம்

Image
 பஞ்ச பூதத்தின் இயக்கம்       ஓங்காரத்தை ( சக்தியின் பிராவகம் விநாயகர் என்றும் , ஒங்காரத்தின் உட்பொருளாக பிராணன் ( விஷ்ணு , உயிர் , காற்று உள்ளது . மலர்ந்து ) " ஓங்காரம் " ( அ , உ , ம் ) இரு மேல் , கீழ் நிலைகளுக்கு இடையில் பிரம்மத்தில் தொடங்கி , பிராணனை தன்னுள் ஈர்த்து , பிரணவநாதனாகவும் , ( உயிராக பிரம்மத்துகளுடன் இணைந்து பிரணவப் பொருளாகவும் உலகை வலம் வருகிறது . ஓங்காரம் ஆகாயம் வரை செல்லும் பொழுது , பஞ்ச பூதங்கள் இணைக்கப்படுகிறது . காலம் ( ஆகாயம் ) என்பது வெற்றுத்தாள் . அதில் பிரம்மம் என்பது நிறைபொருள் . அக்னி என்பது நிறையை மாற்றும் பொருள் . பிராணனால் பிரம்மம் பிரம்ம துகளாகி , பிரம்மத்துகள் அக்னியுடன் இணையும் பொழுது நெருப்பாகிறது . நெருப்பு எல்லா காரணமாகிறது . ஆற்றல்களுக்கும் மாறுதல்களுக்கும் பிரம்மம் அமைதியாக இருந்தாலும் , எல்லா விளையாட்டு களுக்கும் , வினைகளுக்கும் மூலப்பொருளாகவும் மூலமாகவும் உள்ளது . பிரம்மம் விஷ்ணுவுடன் இணைந்து வியாபிக்கிறது , விஸ்வரூபம் எடுக்கிறது . ரஜோ குணமாக பிரம்மம் சிவனுடன் இணைந்து சாத்வீக குணமாகிறது . பிரம்மம் சக்தியுடன் இணைந்து முரட்டுதனமாக...

கால புருஷனின் அடிப்படை செயல்பாடுகளும் பிரதிநிதித்துவ மற்றும் செயல்பாடுகள்

Image
  கால புருஷனின் அடிப்படை செயல்களும் பிரதிநிதித்துவ மற்றும்  செயல்பாடுகளும்       ஜோதிடத்தில் கால புருஷ தத்துவம் என்ற கருத்து மிகவும் சுருக்கமான தத்துவக் கொள்கையாகும். அனைத்து ஜோதிட ஆய்வுகளிளும், உண்மையில், கால புருஷனிற்கும், எதிர்கால மனிதர்களுக்கும் தனிப்பட்ட இடையிலான உறவிலிருந்து பெறப்பட்டவைகள். இந்த உறவின் அடிப்படையிலான அனுமானங்கள் ஒத்துப்போகும் ஆனால் ஒரு சிறிய கற்பனை உலகளாவிய வாழ்க்கைக் கொள்கை முழு பிரபஞ்சத்தையும் பரப்புகிறது என்பதை வெளிப்படுத்தும், அதன் சுய இயகத்தின்படி, அனைத்து வகையான படைப்புகளையும் அகநிலை மற்றும் புறநிலை இருப்பு ஆகியவற்றில் வெளிப்படுத்துகிறது. கால ​​புருஷனின் கருத்து முக்கியமாக பிரதிநிதித்துவப்படுத்துவது மத-தத்துவ நூல்களில் மட்டுமே விவாதிக்கப்பட்டுள்ளது. அண்டக்கதிர் மனிதன் நம்பமுடியாத அளவிற்கு ஒரு நிறுவனமாக கற்பனை ஆற்றாலுடன் செய்யப்படுகிறான், ஆனால் எல்லையற்ற பெரிய மனிதனின் இந்த சின்னம் சாத்தியமான அனைத்து மன மற்றும் தற்காலிக பரிமாணங்களிலும் மனித உயிரினத்தின் அடிப்படைக் கருத்தாக்கத்தின் தோராயமாகும். கால ​​புருஷன் என்பது அனைத்திலும் பரவியுள்ள...

வெளிக் கோள்கள் ( Outer Planets )

Image
வெளிக் கோள்கள் ( Outer Planets )       புளூட்டோ ( PLUTO )  சூரியனிலிருந்து 591 கோடி கிலோ மீட்டர் தொலைவிலும் , தன்னைத்தானே சுற்றிக்கொள்ள 6.3 நாட்களும் சூரியனைச்சுற்ற 248 வருடங்களும் ஆகிறது . புளூட்டோவிற்கு சந்திரன் இருப்பதாக இன்று வரை கண்டு உறுதிச் செய்யப்படவில்லை .அதிக தொலைவில் உள்ளதால் வளிமண்டலம் பற்றி ஆராயப்படவில்லை . இதன் விட்டம் 2000 மைல்கள் ; வெகு தொலைவிலுள்ள புளூட்டோவிற்கு கிடைக்கும் சூரிய வெளிச்சம் நாம் நினைப்பது போல் அவ்வளவு மங்கலானதல்ல . நாம் பெறும் நமது பவுர்ணமி சந்திரவெளிச்சம் , நாம் பெறும் சூரிய வெளிச்சத்தில் 4,40,000 மடங்குக்குறைவானது , மங்கலானது எனலாம் . புளுட்டோவில் , நமக்குத் தரும் சூரிய ஒளிப் பிரகாசம் அங்கு 1600 பங்கு மங்கலாக ( குறைவாக ) பெறுகிறது . ஆதலால் , புளுட்டோவின் வானத்தில் சூரியப் பிரகாசம் பூமிக்கு கிடைக்கும் பவுர்ணமி பிரகாசத்தைப் போல் சுமார் 4,40,000 / 1600 = 275 மடங்கு அங்கு அதிகமாக உள்ளது     ஆக்குதல் , அழித்தல் , அதிகார வெறி ( Loust for power ) கடுமையான கட்டுக் கோப்பு போன்றவற்றை பரிபாலனம் செய்யும் ஆற்றல் புளூட்டோ கிரகத்திற...

வெளிக் கோள்கள் ( Outer Planets )

Image
  வெளிக் கோள்கள் ( Outer Planets )    ( 1 ) யுரேனஸ் ( 2 ) நெப்டியூன் ( 3 ) புளூட்டோ ஆகிய மூன்று கிரகங்களையும் வெளிக் கோள்கள் என்றும் நவகோள்களின் மீது ஆதிக்கம் செலுத்தும் கிரகங்கள் என்றும் குறிப்பிடலாம் .       இந்தக் கோள்கள் மேலை நாட்டு அறிவியலாரால் சில நூற்றாண்டுகளுக்கு முன் கண்டு பிடிக்கப்பட்டவையாகும் . இந்தக் கோள்களிலிருந்து வெளிப்படும் சக்தி இன்றைய நாகரீகச் சிந்தனைக்கும் விபரீதமான செயல்களுக்கும் , புரியாத புரட்சிக்கும் , மறைமுகத் தாக்குதலுக்கும் , எழுச்சிக் கும் , வீழ்ச்சிக்கும் இடமளிக்கின்றன என அறிவியலார் கண் டறிந்து உள்ளனர் .    ஒரு கிரகத்தின் கதிர்வீச்சும் , அதனின்று வெளிப்படும் ரசாயன மாற்றங்களும் மற்ற கிரகங்களில் மாறுபாடுகளை ஏற்படுத்தி புதிய விளைவுகளை உண்டாக்குவது போல் , இந்த மூன்று கிரகங்களிலிருந்து வெளிப்படும் காந்த சக்தியும் ரசாயன மாற்றங்களும் நவகோள் களிடம் புதிய விளைவுகளை ஏற்படுத்துகின்றன இந்த விளைவுகளின் தன்மை ஒரே நிலையானதா ? அல்லது வேறுபடத்தக்க பிரிவுகளா ? என்று இதுவரை முழுமையான ஆய்வுக்குக் கொண்டுவர முடியவில்லை .    ...