ஞாயிறுக் குடும்பம்
' ஞாயிறுக்குடும்பம் ' கதிரவனையும் அதனைச் சுற்றியுள்ள கோள்களையும் ஞாயிறுகுடும்பம் என அழைக்கிறோம். தற்போது ஞாயிறு குடும்பத்தில் எட்டு கோள்கள் உள்ளன. இக்கோள்கள் கதிரவனை ஒரு நீள்வட்டப் பாதையில் சுற்றி வருகின்றன. ஞாயிறு குடும்பத்தின் எந்த ஒரு கோளுமே தானாக ஒளியைத் தராது. ஞாயிறுவின் ஒளியையே அவை பிரதிபலிக்கின்றன. == ஞாயிறு குடும்பத்தில் உள்ள கோள்கள் == ஞாயிறு குடும்பத்தில் எட்டு பெரிய கோள்களும், புளூட்டோ உட்பட சில சிறிய கோள்களும் உள்ளன. கோள்களை கிரகங்கள் என்றும் கூறுவர். . இவை யாவும் கதிரவனை ஒரு மையமாக கொண்டு வெவ்வேறு நீள் வட்ட பாதைகளில் கதிரவனைச்சுற்றி வலம் வருகின்றது. ஞாயிற்கு அண்மையிலிருந்து இதன் ஒழுங்கு பின் வருமாறு.# அறிவன்(புதன்) # வெள்ளி (சுக்கிரன்) # பூமி # செவ்வாய் # வியாழன் # காரி(சனி) # யுரேனஸ் # நெப்டியூன் # புளூட்டோ(சிறிய கோள்) == ஞாயிறு == ஞாயிறு குடும்பத்தின் தலைவன் ஞாயிறு. இது ஒரு விண்மீன். கதிரவன் தானாகவே ஒளிரக்கூடியது இது ஞாயிறு குடும்பத்தின் மையப்பகுதியில் உள்ளது. ஞாயிறு குடும்பத்தின் கோள்கள் அனைத்தும் சூரியனைச் சுற்றும்.பூமியில் நாம் பெறும் [வெப்பம்] மற்றும் ஒளிக்க...