மனமும் பஞ்ச பூதங்களும்

மனமும் பஞ்சபூதங்களும் " காரொளி அண்டம் பொதிந்துல கெங்கும் பாரொளி நீரொளி சாரொளி காலொளி வானொளி ஒக்க வளர்ந்து கிடந்து பின் நேரொளி ஒன்றாய் நிறைந்தங்கு நின்றதே " ( இ - ள் ) கரிய ஒளியானது அண்ட வடிவான பேருவகை மூடி உலகங்கள் எங்கும் மன் / நீர் / நெருப்பு காற்று ஆகாயம் ஆகிய ஒளிகளாக ஒருங்கே வளர்ந்து கிடந்து பின் ஒரேபேரொளியாக நிறைந்து பரந்து நின்று என்பததாமே ! மனம் என்பது எண்ணங்களின் தொகுப்பு என்பதால் அண்டசராசரம் முழுவதும் மனமே நிறைந்துள்ளது . இயற்கையும் மனமும் ஒன்றுக்குள் ஒன்று பிரிக்க முடியாததாக விளங்குகிறது . இயற்கையானது பஞ்சபூதங்களால் ஆனது . பஞ்சபூதங்கள் நிலம் , நீர் , நெருப்பு , காற்று , ஆகாயம் ( வெற்றிடம் ) என பஞ்சபூதங்கள் எல்லா இடங்களிலும் பிரிந்தும் , சேர்ந்தும் உள்ளன . மனதின் ஆசையில் உருவாகும் தொண்ணூற்றியொன்பது ( 99 ) குணங்களுக்கு ஏற்ப பஞ்சபூதங்கள் தொண்ணூற்றி யொன்பது தனித்தியங்கும் தனிமங்களாகவும் விளங்குகிறது . தனிமங்கள் ஒன்றுக்குள் ஒன்று மாறி மாறி இணைந்து பலவகையான அணுத்துகள்களையும் , தனிமம் போன்ற பொருட்களையும் உருவாக்குகிறது . எ...