ராசிமண்டலத்தில் சிவசக்தி !

ராசிமண்டலத்தில் சிவசக்தி ! பகல் - இரவு என்ற காலநிலை அற்ற இடமாகிய திருக்கயிலாயத்தில் பூதகணங்கள் வாழ்த்தி வரவேற்க , நந்திதேவர் புன்னகையோடு நல்வரவு கூற அடக்கமே உருவாக வந்த அகத்திய முனிவர் சிவபெருமானை வணங்கி , ஐயனே ! முத்தமிழ் வித்தகனான எந்தை கந்தவேள் அருளிய மெய்ஞான சித்தாந்தமாகிய சோதிடம் உலக மக்களுக்கு பயனுறும் வகையில் நூல் ஒன்று இயற்றியுள்ளேன் நல்லாசியருள வேண்டும் என்று விண்ணப்பித்தார் . இதைக்கேட்ட சிவபெருமான் அகத்தியனே முத்தமிழுக்கு முதல் நூல் படைத்து பெருமை கொண்ட உன் வார்த்தைகள் எல்லாம் என் வார்த்தை என்றுதானே பொருள் நீ வழங்கப்போகும் சோதிட நூலும் உலக மக்களால் என்றென்றும் போற்றிக் கொண்டாடும் களஞ்சியமாகத் திகழட்டும் . எங்கே உன் படைப்பைக் கூறு ? என்றார் . வான வீதியில் நவக்கிரகங்களுக்கு நாயகனான சூரிய பகவானாக விளங்கும் தாங்கள் சிங்க ராசிக்கு அதிபதியாகி வீற்றிருக்க , தனம் , வாக்கு , குடும்பம் , வித்தை , பொன் பொருள் ஆகிய இரண்டாமிடத்துக்கு ஸ்ரீமந் நாராயணன் அதிபதியாகி திகழுகின்றார் . திருமாலின் நாயகியான ஸ்ரீதேவியின் அம்சமாகிய...